பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அடிப்படை மூலப்பொருள்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபர திணைக்கள முதன்மை பொருளாதார வல்லுனர் கிறான்ற் பிட்ஸ்னர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் புடவைகள்,எரிபொருள் சக்தி விலை,மற்றும் வாகனங்கள் குறிப்பாக கார்களின் விலை அதிகரிப்பு கூடியளவு ஏற்றநிலை அமைந்திருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்படியான விலையுயர்வுகளும் வாழ்க்கைச்செலவு வீத அதிகரிப்பும் 2011 ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப்பின்னர் ஏற்பட்ட அதிகூடிய ஏற்றம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.