🏃‍♀️நூறு இளைஞர்களே வாருங்கள் 🏃‍♂️

நூறு இளைஞர் இருந்தால் போதும்
நூற்றாண்டு தாண்டியும் புவிப்பேசும் நாட்டின் பெருமையை புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க எழுந்து வாருங்கள்…

உன்னால் முடியாது என்று மட்டம் தட்டிய மானிடர் முன், மலைப்போல் உயர மார்தட்டி வாருங்கள்…

வையகம் காண வாழ்வைப் படைக்க வரிப்புலியாய் வாருங்கள்….

சிரிப்பின்றி சிந்தனையில் சிறகடித்தது போதும்,
சிறகற்று பறக்க சீர்திருத்த வாருங்கள்….

முயற்சி இன்றி மூடராய்
இருந்தது போதும்,
உலகிற்கு முகம் காட்ட எழுச்சியுடன் வாருங்கள்…

அடிமையென அறியாமல், பிறர் பின்னால் அலைந்தது போதும், புதிய விடியலை காண விரைந்து வாருங்கள்….

தோகை விரித்து,
வாகை சூட வாரீர்…… 🙏

எழுதுவது ; த.திவ்ய லட்சுமி
திருப்பத்தூர்