எம் உரித்தான கூத்துக்கலை
அரங்கமின்றியே ஆடிடும் கூத்துக் கலை!
அருந்தமிழின் வாய்மொழியில் தமிழனின் கலை!
அன்றைய நாளில் இருந்ததே அக்கலை!
அருகியே போகிறதே அந்தக் கலை!
பாரம்பரியக் கலைகளில் கூத்தும் ஒன்றானது!
பாடுபட்டு உழைப்போரின் களைப்பினைப் போக்குவது!
சமூகத்திற்குத் செய்திகளை எடுத்துச் சொல்வது!
சலிப்பின்றியே கதைகளைக் காட்சியாக்கிக் காட்டுவது!
நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் கலையே!
நாடோடி கலையே! கூத்துக் கலையே!
கட்டையால் ஆன அணிகலன்கள் போதுமே!
கண்ணுக்கு விருந்தாக அரிதாரம் இருக்குமே!
அண்டமெல்லாம் ஆள்கின்ற கூத்தனும் ஆடுவது!
அவனின்றியே ஏதிங்கே ஆடல் கலையது!
அழியும் அந்தக் கலையினையே வளர்ப்போம்!
அதற்காக் கலைஞர்களுக்கு ஆதரவைக் கொடுப்போம்!
எழுதுவது : மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.