மெல்போர்ன் பார்க் ஹோட்டல் அகதிகள் முகாம் அகதிகள் விடுவிக்கப்பட்டனர்.

படகுகளில் அகதிகளாக வந்தவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று ஆஸ்ரேலிய அரசு முடிவுசெய்ததிலிருந்து அப்படியாக வந்தவர்கள் கையாளப்பட்ட முறைகள் குறித்து உலகெங்கும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அவர்களை முதலில் நாட்டுக்கு வெளியே வேறு தீவுகளில் முகாம்களில் தங்கவைத்திருந்த ஆஸ்ரேலியா பின்னர் ஒரு பகுதியாரை நாட்டின் வெவ்வேறு அகதிகள் முகாம்களில் தங்கவைத்திருந்தது. அவர்களில் ஒரு சாரார் மெல்போர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களையே தற்போது அரசு வெளியேற அனுமதித்திருக்கிறது.

மெல்போர்னில் டென்னிஸ் வீரர் யோகோவிச்சுக்கு ஆதரவுக் குரலெழுப்பும் விசிறிகள். – வெற்றிநடை (vetrinadai.com)

இவ்வருட ஆரம்பத்தில் ஆஸ்ரேலியாவுக்கு டென்னிஸ் விளையாட வந்து அதற்கு அனுமதிக்கப்படாத யோக்கோவிச் அதே பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அச்சமயத்தில் குறிப்பிட்ட அகதிகள் மீது மீண்டும் சர்வதேசக் கவனம் விழுந்திருந்தது. அவர்கள் பல வருடங்கள் ஆஸ்ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாதிருந்த பின்னர் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அதுபோன்ற முகாம்களிலும் சுமார் ஓரிரு வருடங்களும் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.aust

ஆஸ்ரேலியாவின் வேறு நகர முகாம்களிலிருந்தும் மொத்தமாக 20 அகதிகள் வியாழனன்று வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஆஸ்ரேலியாவின் இந்த நகர்வுக்கான காரணம் எதுவென்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் சுமார் 10 பேர் அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணத்தையும் அரசு இதுவரை குறிப்பிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *