ஓபெரா இசைக்கலையை உலகக் கலாச்சாரப் பாரம்பரியமாக்க விரும்பும் இத்தாலி.

ஐ.நா -வின் சர்வதேசக் கலாச்சாரப் பட்டியலில் தமது நாட்டின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான ஓபெரா இசையை அறிவிக்கவேண்டுமென்று கேட்டு விண்ணப்பித்திருக்கிறது இத்தாலி. ஏற்கனவே இவ்வருட ஆரம்பத்தில் எக்ஸ்பிரஸ்ஸோ காபியை அதே பட்டியலில் சேர்க்கும்படி கேட்டிருந்தது இத்தாலி.

“உலகின் மற்றைய நாடுகளிலிருந்து இந்தாலியின் சமூகத்தினரைத் தனிப்படுத்திக் காட்டும் உண்மையான ஒரு சடங்கு,” என்று எக்ஸ்பிரஸ்ஸோ காபியை இத்தாலியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஓபெரா இசைக்கலையைப் பற்றி, “அது இத்தாலியக் கலாச்சாரத்தில் மூலமுதலாகத் தோன்றிய உணர்வுகளை உச்சரிக்கும் உண்மையான ஒரு இசைக்கலை,” என்று குறிப்பிடுகிறார் கலாச்சார அமைச்சர் டாரியோ பிரான்செஸ்சினி.

ரோமராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இத்தாலியில் விவிலியக் கதைகள் உடப்ட்ட பல்வேறு வழிபாட்டு நாடகங்கள் தேவாலயங்களுக்கு வெளியே நடாத்தப்பட்டன. அவைகளில் வாய்வழியான உச்சரிப்பு முறையே ஓபராவின் ஆரம்பகாலத் தோற்றம் என்று குறிப்பிடப்படுகிறது. அது இன்று உலகம் முழுவதும் பரவி மில்லியன் கணக்கானோரால் ஆராதிக்கப்படும் ஒரு இசைக்கலையாக விளங்கி வருகிறது. 

2017 ம் ஆண்டு இத்தாலியின் நப்போலிதான் பிட்ஸா ஐ.நா – வின் உலகக் கலாச்சாரங்கள் என்று பட்டியலில் இடம்பெற்றது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *