புதிய நகானோ – கரபாக் தகராறுகளில் சுமார் 50 இராணுவ வீரர்கள் இறப்பு.

ஆர்மீனியாவுக்கும் ஆஸார்பைஜானுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் உண்டாகிய தகராறுகளில் சுமார் 50 இராணுவத்தினர் இறந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகவே இரண்டு இனத்தினருக்கிடையே இருந்து வரும் நகானோ – கரபாத் பிராந்தியம் பற்றிய அரசியல் முரண்பாடுகள் இதற்கு முன்பு 2020 இல் உண்டாகியிருந்தது. ஆறு வாரங்களாக நடந்த அந்தப் போரின் பின்னர் ஆஸார்பைஜான் அப்பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டியது.

1980 இல் சோவியத் ஆட்சிக்குள்ளிருந்த சமயத்தில் ஆர்மீனியாவின் இராணுவம் ஆஸார்பைஜானின் பிராந்தியமான நகானோ – கரபாக்கினுள் நுழைந்து அதைத் தமதென்று பிரகடனப்படுத்தியதால் தற்போதைய முரண்பாடுகளுக்கான நிலைமை உண்டகியது. அப்பிராந்தியம் ஆர்மீனியர்களைப் பெருமளவில் கொண்டிருப்பினும் ஆஸார்பைஜானின் பகுதியாகவே சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நகானோ – கரபாக் ஆர்மீனியர்கள் தாம் வாழும் பகுதிகளைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தியதை அடுத்தே அச்சமயத்தில் போர் உண்டாகியது.

2020 இல் இரண்டு தரப்பாருக்கும் ஏற்பட்ட போரை ரஷ்யாவின் முயற்சி முடிவுக்குக் கொண்டுவந்தது. அதையடுத்து அங்கே சுமார் 2,000 ரஷ்ய அமைதி பேணும் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்திகளும் அவ்விரண்டு நாடுகளின் எல்லையில் ஆரம்பித்திருக்கும் போரை ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

ஆசார்பைஜான், ஆர்மீனியா ஆகிய இரண்டு நாடுகளும் போருக்கான காரணம் எதிர்த்தரப்பார் அமைதி ஒப்பந்தத்தை மீறி மற்றவரின் பிராந்தியத்துக்குள் நுழைந்து கைப்பற்ற முயன்றதாகக் குறிப்பிடுகின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *