பிரேசில் தேர்தலின் முதல் சுற்றில் எதிர்பாராத அளவு ஆதரவு பெற்று பொல்சனாரோ தோற்றார்.

ஞாயிறன்று பிரேசிலில் நடந்த தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ சுமார் 44 % வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே லூலா டா சில்வா சுமார் 48 % வாக்குகளுடன் முதலிடத்தைப்  பெற்றார். ஆயினும், நீண்ட காலமாக ஆதரவுக் கணிப்பீடுகள் சுட்டிக்காட்டிய அளவு பெரிய அளவில் அவருக்கு ஆதரவு கிடைக்காததால் இத்தேர்தல் முடிவு ஒரு ஏமாற்றமானது அவருக்கு.

அவர்களிருவரையும் விட மேலும் ஒன்பது வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் முதலிடத்துக்கு வந்த இருவருமே முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர். 

“இந்த நாட்டின் ஆட்சியை நாம் குறிப்பிட்டபடி மாற்றுவதே பிரேசிலுக்கு நல்லது என்று நாம் இன்னும் பலமாக எங்களுடைய வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,” என்றார் லூயிஸ் இக்னாசியோ லூலா டா சில்வா தனது வெற்றிக்காக நன்றியைத் தெரிவித்தபோது. மேலும் நான்கு வாரங்களில் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலில் அவர் 50 % அதிகமான வாக்குகளைப் பெற்றாலே அவ்வெற்றிக்கனி அவருக்குக் கிட்டும்.

தேர்தல் நடக்க முன்னர் நீண்ட காலமாகவே பொல்சனாரோ நாட்டின் தேர்தல் முறையையும், இயந்திரம் மூலமாக வாக்குகளை எண்ணுவதையும் விமர்சித்து வருகிறார். எனவே, அவர் முதல் சுற்றிலேயே தோற்றிருப்பின் அவரது ஆதரவாளர்கள் கலவரங்களை உண்டாக்கியிருப்பார்கள் என்ற பயம் நாட்டில் இருந்தது. சுமார் 500,000 பொலிசாரும், பாதுகாப்புப் படையினரும் தேர்தல் நாட்களையொட்டித் தயார் நிலையில் இருந்தார்கள்.

தனது ஆதரவாளர்கள் முன்னர் நன்றி கூறி உரை நிகழ்த்திய பொல்சனாரோ, “நாங்கள் ஒரு பொய்யை வென்றிருக்கிறோம்,” என்று ஆதரவுக் கணிப்புகள் அவருக்கான ஆதரவு அவர் பெற்ற வாக்குகளை விடக் குறைவானதே என்று பல தடவைகள் குறிப்பிட்டிருந்ததை அவர் சாடினார். நாட்டின் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களில் அவர் தனது எதிர் வேட்பாளரைவிட அதிகளவில் வென்றிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *