சிறீலங்காவில்  அதிகரிக்கும்  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

சிறீலங்காவில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில்  அதிகளவு அதிகரித்துள்ளதாக.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் கடந்தகால பொருளாதார தாக்கங்களினாலும் அதன் விளைவுகளாலும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் முனைப்பையே அதிகம் காட்டுவதாகத் உள்ளூர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த 2022 ஜனவரி முதல் ஜூலை வரையில்  224,915 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக   பணியகத்தின்  தரவுகள் காட்டுகின்றன.

இது கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது  குறிப்பிடத்தக்க பெரும்  எண்ணிக்கை அதிகரிப்பு என்று குறிப்பிடப்படுகிறது.

செப்டெம்பர் 30 வரையிலு  இந்த எண்ணிக்கை மேலும் 233,756 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தற்காலங்களில்  மாதமொன்றுக்கு அண்ணளவாக 78,000 கடவுச்சீட்டுகளை வழங்குவதாக அதன் தரவுகளில் காட்டுகிறது.

இந்த அதிகரிப்பானது மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் மனநிலையின் தாக்கம் என உள்ளூர் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *