திங்களன்றும் உக்ரேனின் தானியங்களைச் சுமந்துகொண்டு துருக்கியை நோக்கிப் பயணமாகின.

உக்ரேன் – ஐ.நா, ரஷ்யா ஒப்பந்தத்தின்படி உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் சில மாதங்களாக துருக்கியின் ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்தன. ஞாயிறன்று அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக ரஷ்ய அரசு தெரிவித்திருந்தது. தங்களது கடற்படையைக் குறிவைத்து உக்ரேன் தாக்கியதே அதற்குக் காரணம் என்றும் ரஷ்யா குறிப்பிட்டிருந்தது. 

ரஷ்யா தன்னளவில் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாகத் தெரிவித்த பின்னரும் செப்டெம்பர் 31 ம் திகதியன்று ஒரு டசின்  கப்பல்கள் உக்ரேனின் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிக்கொண்டு துருக்கியை நோக்கிப் பயணமாகின. மேலும் பல கப்பல்களை ஏற்றிக்கொண்டு உக்ரேனின் கருங்கடல் துறைமுகத்தில் தயாராக நிற்கின்றன. நாலு கப்பல்கள் தானியனளைக் கொண்டுசென்றுவிட்டுத் துறைமுகம் நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றன. இதுவரை குறிப்பிட்ட ஒப்பந்தத்தின்படி சுமார் 10 மில்லியன் தொன் தானியத்தை உக்ரேன் ஏற்றுமதி செய்திருக்கிறது.

துறைமுகத்தில் தயாராக நிற்கும் கப்பல்களில் 40,000 தொன் தானியத்தை ஏற்றிக்கொண்டு எத்தியோப்பியாவை நோக்கி ஞாயிறன்று செல்லவிருந்த கப்பல் போகுமென்று நம்பவியலவில்லை என்று உக்ரேன் வர்த்தக அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ரகோவ் டுவீட்டினார். 

மேற்கு நாடுகள், நாட்டோ அமைப்பு, ஐ.நா மற்றும் பல நாடுகள் சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தானியத் தட்டுப்பாடு, விலையுயர்வு ஆகியவை வறுமையில் வாடும் மக்களை மேலும் வருத்தாமலிருக்க, ஏற்படுத்தப்பட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தைத் தொடரும்படி ரஷ்யாவை வேண்டிக்கொண்டன. அதுபற்றிய விபரங்களைப் பற்றி விவாதிக்க துருக்கி, ஐ.நா அமைப்பு ஆகியவற்றுடன் தாம் விரைவில் தொடர்பு கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *