கடற்கரையையடுத்திருக்கும் சக்கிர் அரண்மனையில் பாப்பாண்டவரை பஹ்ரேன் மன்னர் வரவேற்றார்.

இரண்டாவது தடவையாக வளைகுடா நாடொன்றுக்கு விஜயம் செய்திருக்கும் பாப்பரசர் பிரான்சீஸ் பஹ்ரேனில் வந்திறங்கினார். ரோமிலிருந்து புறப்பட்டு கிரீஸ், சைப்பிரஸ், எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு மீதாகப் பறந்தபோது அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு அவரது நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 

ஜோர்டான் மீதாக பாப்பரசர்”Shepherd One” விமானத்தில் பறந்தபோது நாட்டின் அரசன் அப்துல்லா II தனது விமானப்படையின் F-16 விமானங்களை அதற்குத் துணையாக அனுப்பியிருந்தார். அவருடைய விஜயத்தை ஆவணப்படுத்துவதற்காக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 பத்திரிகையாளர்களும் அவ்விமானத்தில் பறந்தனர். அவர் பறக்கும் விமானம் “Shepherd One” என்று ஊடகங்களால் அழைக்கப்படுகிறது. அது அவரது அல்லது வத்திக்கானின் சொந்த விமானமல்ல. அவரது விஜயங்களுக்காக வாடகைக்கு எடுக்கப்படுகிறது.

பஹ்ரேனில் ஸல்லாக் நகரையடுத்திருக்கும் சக்கீர் அரண்மனையில் பாப்பரசரை பஹ்ரேன் மன்னர் ஷேய் ஹமாத் பின் ஈஸா அல் காலிபா வரவேற்றார். “இன, மத, நாடுகள் என்ற பேதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மனிதர்கள் ஒற்றுமையாக எல்லோரின் நல்வாழ்வுக்காக ஒன்றுபடவேண்டும்,” என்று தனது செய்தியில் குறிப்பிட்ட பாப்பரசர் தொழிலாளர்களுடைய சூழலை மேம்படுத்துதல், மரண தண்டனையை ஒழித்தல் போன்றவை பற்றியும் குறிப்பிட்டார்.

பஹ்ரேனில் சுமார் 80,000 கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பஹ்ரேனைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சுமார் 1,500 பேராகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *