ஆபிரிக்க நாட்டவர்களுக்கு விசாவின்றி நாட்டைத் திறந்துவிட்ட செர்பியாவின் தடால் மாற்றம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஆர்வத்துடனிருக்கும் செர்பியா மே மாதம் முதல் துனீசியா, புருண்டி ஆகிய ஆபிரிக்க நாட்டவர்கள் தனது நாட்டுக்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் அதை ஆட்சேபித்து செர்பியா தனது முடிவை மாட்டிக்கொள்ளாவிட்டால் ஒன்றியத்துடனான செர்பியர்களுக்கான விசா சலுகைகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்து. ஆபிரிக்க நாடுகளுக்கு விசாவின்றித் திறந்த கதவுகளை அதனால் செர்பியா மூடிவிட்டது. 

செர்பியா சில ஆபிரிக்க நாடுகளுக்கு விசாவின்றி எல்லைகளைத் திறந்துவிடக் காரணம் அவர்கள் தமது பக்கத்து நாடான கொசோவோவுடன் கொண்டிருக்கும் பகையாகும். கொசோவோ சர்வதேச ரீதியில் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக இருப்பினும் செர்பியா அவர்களுடன் கொண்டிருக்கும் எல்லை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அதை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள். அத்துடன் அதேபோன்று கொசோவை அங்கீகரிக்க மறுக்கும் ஆபிரிக்க நாடுகளுக்குத் தமது நாட்டுடன் சலுகைகள் கொடுத்து வருகிறார்கள். அந்தக் காரணத்தினாலேயே ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்குச் செர்பியா விசா தேவையில்லை என்று அனுமதித்தது.

மொரொக்கோ, துனீசியா, எகிப்து, புருண்டி, இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான், கியூபா, துருக்கி ஆகியா நாடுகள் செர்பியாவின் ஆபிரிக்க நாடுகளுக்கான விசா சலுகையை உபயோகித்து செர்பியா வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புகுந்து வருகிறார்கள். கடந்த மாதங்களில் அந்த வழியில் ஒன்றியத்துக்குள் அனுமதியின்றிப் புகுந்தவர்களின் எண்ணிக்கை 106,000 க்கும் அதிகம் என்கிறது ஒன்றியத்தின் புள்ளிவிபரங்கள். அது கடந்த வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த அகதிகளை விட 107 % அதிகமாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *