புது சட்டம் இயற்றிய சிறீலங்கா பாராளுமன்றம் | எதிர்க்கும் சர்வதேச அமைப்புக்கள்
சிறீலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் விடயத்தில் , சர்வதேச அமைப்புக்கள் பல பலத்த எதிர்ப்பை வெளியிட்டு விமர்சித்துள்ளனர். குறிப்பாக சர்வத மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பு ஆகியன தமது எதிர்ப்பினை உடனடியாகவே பதிவுசெய்துள்ளன.
சிறீலங்கா அரசாங்கம் இராணுவத்துக்கு அதிகாரங்களை வழங்கும் சட்டங்களை வகுப்பது சிறீலங்காவின் எதிர்காலம் குறித்த அச்சநிலை அதிகரிக்கும் சூழல் அதிகம் காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளன.
புனர்வாழ்வு பணியக சட்டத்தினூடாக குறித்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எடுக்கப்போகும் இராணுவம்,
இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தினால் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என்பதை எதிர்வுகூறியிருக்கின்றன.
சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசல் நிலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மனிதாபிமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டத்தை நியாயப்படுத்தும் சிறிலங்கா பாராளுமன்றம் தெரிவிக்கின்ற போதிலும் , இது சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலான சட்டமே என சர்வதேச மன்னிப்புச் சபையும் ,சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பும் கூட்டாக குறிப்பிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.