விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மனைவி ,மகள் உயிருடன் இருக்கிறார்களா…?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி , மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.பல தசாப்தமாக நடைப்பெற்ற உள் நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 30ம் திகத முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது உறவினர்களும் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பெண் ஒருவர், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இறுதி கட்ட யுத்தத்தின் போது எனது தங்கை மதிவதனி ,மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.இதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்துக்கொண்டேன். கடந்த சில தினங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாக அறிந்துக்கொண்டேன்.பிறகு அவர்களை நேரில் சந்தித்து உறவாடி,உணவருந்தி விட்டு வந்துள்ளேன்.இந்த செய்தியை சந்தோசமாக எனது உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும தெரிவித்துக்கொள்கிறேன்.உண்மையில் இந்த செய்தியை கடவுள் கொடுத்த நன்கொடையாகவே நினைக்கிறேன் . நன்றி வணக்கம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை சமூக ஊடகங்களில் பரவி வரும் மதிவதனி மற்றும் துவாரகா உயிருடன் இருப்பதான செய்தி போலியானது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.இது ஒரு நாடகம் தமது கவனத்தை திசைதிருப்புவதற்காக செய்யப்படுகின்றன.இது ஒரு நகைச்சுவையான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *