ஒரே குச்சியில்
நொடிக்கவிதைகள்.!
அமைதியை
இழந்தது
உறைந்த குளம்..
வளையங்களை
உருவாக்கிய
நான் வீசிய கல்.!
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
காற்றில் எரியும் மெழுகுவர்த்தி..
நெருப்பின்
நடனம்.!
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
இன்னும் கூட
சரியாகத் தொடங்கி இருக்கலாம்..
கடந்து போன புத்தாண்டை.!
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
மிகவும்
மெதுவாய்
சிதைவுறுகின்றன
குளிரும் விறகும்.
அடுப்பில்.!
🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
ஒரே குச்சியில்
பற்றவைத்து விட்டேன்..
பல பிரச்சினைகளை.!
எழுதுவது : ப.ஜார்ஜ்.