முயற்சி போர்…
இன்னும் பல
அவமானங்களை
கடந்தாக நேரிடும்…
ஏமாற்றங்களை
ஏற்றுக் கொண்டாக
நேரிடும் …
வலிகளில்
மூழ்கித் துடிக்க
நேரிடும்…
வறுமையில்
சிக்கித் திணற
நேரிடும்…
அறியப்படாத
துரோகிகளை
இனம் காண நேரிடும்…
நட்டங்கள்
நறுக்க நேரிடும்…
திட்டங்கள்
சிதற நேரிடும்…
ஆனாலும்..,
வெற்றி எனும் உச்சம்
தொடும் வரை ..,
என் முயற்சி போரிடும்…
நம்பிக்கை எனும்
ஆயுதம் கொண்டு…!!!!
எழுதுவது : வெண்பா, தமிழ்நாடு