டிரம்ப்பிடம் திட்டு வாங்கினார் ரிபப்ளிகன் கட்சியின் செனட் சபையின் தலைவர் மிச் மக்டொனல்.
திங்களன்று சந்தித்த எலக்டர்களின் மாநாடு ஜோ பைடனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததை அறிந்தபின் தான் ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் வெற்றிக்காக அவரை வாழ்த்தத் துணிந்தனர். அவர்களிலொருவர் மிச் மக்டொனல்.
“எங்களில் பலரும் வேறொரு விதமான தேர்தல் முடிவை எதிர்பார்த்தோம். ஆனாலும், ஜனவரி 20 ம் திகதியன்று யார் ஜனாதிபதியாகப் பதவியேற்பது என்பதை எங்கள் தேர்தல் அமைப்பு முடிவு செய்கிறது.” என்று கூறி ஜோ பைடனை வாழ்த்திய மிச் மக்டொனல் சக கட்சித் தலைவர்களையும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும்படி ஊக்குவித்ததாகத் தெரிகிறது.
அதனால் கோபமடைந்த டிரம்ப், “மிச், 75,000,000 என்பது பதவியிலிருக்கும் ஜனாதிபதி பெறக்கூடிய மிக அதிகமான வாக்குகள். தோல்வியை ஒப்புக்கொள்ளும் தருணமல்ல. ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் இனியாவது போராடக் கற்றுக்கொள்ளவெண்டும். மக்கள் கோபமாக இருக்கிறார்கள்,” என்று டுவீட்டியிருக்கிறார்.
ஜனவரி 5 ம் திகதி ஜோர்ஜியாவில் நடக்கப்போகும் இரண்டு செனட்டர்களுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் ஒருவர். அவரது வெற்றிக்காக ஜோர்ஜியாவில் கூட்டங்கள் நடத்தி வாக்காளர்களை உற்சாகப்படுத்துவதில் டொனால்ட் டிரம்ப் சில நாட்களாகவே இறங்கியிருக்கிறார். அத்தேர்தல் கூட்டங்களில் டிரம்ப் அமெரிக்க தேர்தல் முறையையும், தேர்தல் முடிவையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்