விமானப் பணிப்பெண்களாக சவூதியப் பெண்களை பணிக்கெடுக்க சவூதிய விமான நிறுவனம் முடிவு!
விமான ஓட்டிகளில் பாதிப்பேராவது சவூதிய குடிமக்களாக இருக்கவேண்டுமென்ற குறியை எட்டிய சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், நாட்டின் பெண்களுக்காக 50 இடங்களை முதல் கட்டமாக ஒதுக்குகிறது.
இவ்வருட ஆரம்பத்திலேயே சவூதி அரேபியாவின் சிறிய ஒரு விமான நிறுவனமாகிய பிளைநாஸ் சவூதியப் பெண்களை பதவிகளுக்கு எடுக்க ஆரம்பித்திருந்தது. சவூதிய அரசு மெக்கா, மதீனா புனித நகர சேவைகளில் உட்பட நாட்டின் பல சேவைகளிலும் பெண்களை வேலைக்கு எடுப்பதை ஒரு குறியாகவே செய்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்