டிரம்ப்பின் அணியில், பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும்.
வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறும் நாள் நெருங்க நெருங்க அவரது கட்சிக்காரர்களே அவரை உதாசீனப்படுத்துவதும் அதிகரிக்கிறது. விளைவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் யார், எவர் பக்கம் என்றில்லாத ஒழுங்கினம் வலுத்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொரோனாக்கால உதவித் தொகையாக வேலையில்லாதவர்களுக்கு தலா 600 டொலர்கள் கொடுக்கப்படும் மசோதாவைப் பல இழுபறிகளுக்கு இடையே இரண்டு எதிர்க்கட்சியினரும் ஒரே அணியிலிருந்து டிரம்பின் அறுதி வாக்கை வீழ்த்திச் சட்டமாக்கினார்கள்.
அந்த உதவித்தொகையை உயர்த்தி ஆளுக்கு 2,000 டொலர்களாக்கும்படி சட்டமியற்ற விரும்புகிறார் டிரம்ப். ஆனால், அந்த மாற்றத்தை விரும்பாத ரிபப்ளிகன் கட்சி செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் மிச் மக்டொனால்ட் அந்தக் கேள்வியையே செனட் சபையில் எடுக்க மறுத்து வருகிறார்,
இந்த முறையோ, அதே 2,000 டொலர்களை அமெரிக்கர்கள் தமது வருமானங்களை இழந்து கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் கொடுக்கும்படி ஜோ பைடன், பெர்னி சாண்டர்ஸ் உட்பட பல டெமொகிரடிக் கட்சித் தலைவர்களும், சில ரிபப்ளிகன் கட்சியினரும் கேட்டு வருகிறார்கள். ஆனால், எவருக்கும் காதுகொடுக்க மிச் மக்டொனல்ட் தயாராக இல்லை.
இதேசமயம் ஜனவரி 5 ம் திகதி நடக்கவிருக்கும் இரண்டு செனட் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் நிற்பவர்களிலொருவர் அதே மிச் மக்டொனால்ட் ஆகும். அந்த இரண்டு இடங்களையும் கைப்பற்றுவது இரண்டு கட்சிகளுக்கும் மிக அவசியம். காரணம், அவ்விரண்டு இடங்களை வெல்பவர்கள் செனட் சபையிலும் பெரும்பான்மையை அடைவார்கள். ஏற்கனவே டெமொகிரட்டிக் கட்சியினர் இரண்டாவது சபையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறார்கள். மிச் மக்டொனால்டின் இந்த நகர்வால் அவ்விரண்டு இடங்களும் இழக்கப்பட்டால் அக்கட்சியினருக்கு இரண்டு சபைகளிலுமே பெரும்பான்மை இல்லாமலாகிவிடுமென்று அஞ்சுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர்.
சாள்ஸ் ஜெ. போமன்