நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோருக்கு மூன்றாவது தடுப்பூசி பரிந்துரை.
கடுமையான நோய் எதிர்ப்புக் குறைபாடுகள் (severely immunocompromised people) உடையவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம்பரிந்துரை செய்துள்ளார்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், அண்மையில் எலும்பு மச்சை மாற்று சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் போன்றோரும் வலுவான நோய் எதிர்ப்புத் தடுப்பு சிகிச்சைகளைப் பெற்று வருகின்ற தன்னுடல்தாக்க நோய்கள் (autoimmune diseases) உள்ள வர்களும் மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்படவேண்டியவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டு நான்கு வாரங்களில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவேண்டும்
என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோயாளர்கள், நீண்ட கால சிறுநீரக வியாதிகளுக்கு சிகிச்சை பெறுவோருக்கு மூன்றாவது தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.