எந்நாளும் நன்னாளே
தித்திக்கும் திங்களால்திக்கெட்டும் திறக்கட்டும்சித்திக்கும் செவ்வாயால்சிந்தனை செழிக்கட்டும் அறிவனின் அலர்வால்தெளிவுகள் பிறக்கட்டும்விரிகின்ற வியாழனால்விடிவுகள் மலரட்டும் வருகின்ற வெள்ளியால்வெற்றிகள் விளையட்டும்தருகின்ற காரியால்மாற்றங்கள் நிகழட்டும் ஓய்வான ஞாயிறால்ஞாலமிது உய்யட்டும்நோயற்ற நாட்களால்நலமெங்கும் பூக்கட்டும்
Read more