உலகின் பெரும்பாலான டொலர் பில்லியனர்கள் வாழும் நகரம் பீஜிங்!
உலகில் பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சொத்துள்ளவர்கள் வாழும் நகரமாக இருந்த நியூ யோர்க்கை அவ்விடத்திலிருந்து அகற்றி முதலிடத்தைப் பெற்றிருக்கிறது பீஜிங். கடந்த வருடத்தில் அந்த நகரத்திலிருந்த பில்லியன் டொலர் பணக்காரர்களின் எண்ணிக்கை 33, இப்போது 100 ஆகியிருப்பதாக வருடாவருடம் உலகப் பணக்காரர்களைக் கணிப்பிடும் Forbes சஞ்சிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஏழு வருடங்களில் முதல் தடவையாக பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சொத்தை வைத்திருப்பவர்களில் இரண்டாவது இடமாக ஆகியிருக்கும் நியூ யோர்க்கில் 99 பேர் அத்தொகைச் சொத்தைத் தாண்டியிருக்கிறார்கள். ஆனால், மொத்தச் சொத்து மதிப்பில் நியூ யோர்க்கின் பில்லியன் டொலர்ப் பணக்காரர்கள் பீஜிங்கின் அதேபோன்ற பணக்காரர்களை விட அதிகமான சொத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
பீஜிங்கின் அதிவேகமான இந்த வளர்ச்சிக்குக் காரணம் சீனா தனது நாட்டில் பரவ ஆரம்பித்த கொரோனாத் தொற்றுக்களை படு வேகமாகச் செயற்பட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததே என்று குறிப்பிடப்படுகிறது. அந்தத் தலைமை இடம் நாட்டின் பொருளாதாரத்தை வேகமாகத் தலை நிமிர்த்த உதவியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்