‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?
“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத் தேவையான மரபுப் பதார்த்தம் மனிதரிலும் ஏனைய பாலூட்டி விலங்குகளிலும் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இதன் மூலம் மனிதர்களில் ஒருகாலத்தில் நச்சு உமிழ்நீர் (venomous saliva) தோன்றக் கூடும் என்று அவர்கள் “நகைச்சுவையாக” எதிர்வு கூறியுள்ளனர்.
ஜப்பானின் ஓகினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (Okinawa Institute of Science and Technology Graduate University) ஆராய்ச்சிக் குழுவினர் இது தொடர்பாகப் புதிய ஆய்வுகளை நடத்தி உள்ளனர்.
பாம்புகள், சிலந்திகள், தேள்கள் போன்றவற்றால் சுரக்கப்படுகின்ற நச்சு உமிழ்நீர் அவை இரையைப் பிடிப்பதற்கு அல்லது எதிரியிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கொத்துதல் கடித்தல் போன்ற வழிமுறைகள் ஊடாகப் பயன்படுகிறது. காட்டு வௌவால்கள் போன்ற சில பாலூட்டிகளிலும் விஷம் காணப்படுகிறது.
பாம்புகளின் விஷ சுரப்பிகளுக்கும் மனிதர்களின் ஊமிழ் நீர் சுரப்பிகளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்ய முயன்ற அறிவியல் குழு பல புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளது.
உமிழ் நீரில் விஷம் உற்பத்தியாவதற்கு அவசியமான மரபணு அடிப்படை(genetic foundation) ஊர்வன மற்றும் பாலூட்டிகள் இரண்டிலும் இருப்பதை அவர்கள் கண் டறிந்தனர். பாம்புகளின் நச்சுச்சுரப்பிகள், பாலூட்டிகளின் உமிழ் நீர்ச் சுரப்பிகள் இரண்டுக்கும் இடையே மூலக்கூற்று இணைப்பு (molecular link) இருப்பதை உறுதி செய்கின்ற முதலாவது ஆய்வு இதுவாகும்.
பாம்புகளின் நச்சுச் சுரப்பியில் உள்ள ‘கல்லிகிரீன்ஸ்’ (Kallikreins) என்ற ஒருவ கைப் புரதத்தை மனித உமிழ் நீர் சுரப் பிகளும் உற்பத்தி செய்ய முடியும் என் பதை உறுதிப்படுத்துகின்றது இந்த ஆய்வு.
இரண்டு உயிரினங்களும் மரபு மாற்றங் களினால் வெவ்வேறு பரம்பரைகளாகப் பிரிவடைவதற்கு முன்னர் பாம்புகளின் நச்சுச் சுரப்பிகளும் பாலூட்டிகளின் உமிழ் நீர்ச் சுரப்பிகளும் பல நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மரபு ரீதியில் ஒன்றுடன் ஒன்று ஒத்த தன்மை யைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள னர்.
“தீவிரமான நச்சுச் சுரப்பிகளே பின்னர் உமிழ் நீர்ச்சுரப்பிகளாக மாற்றமடைந்த ருக்கும் என்பதை விஞ்ஞானிகள் உள்ளுணர்வாக நம்பினர். ஆனால் கோட்பாட்டு ரீதியாக அதனை நிரூபிக்கின்ற
உண்மையான ஆதாரம் இதுதான்” – என்று கூறுகிறார் ஆய்வுக் குழுவில் ஒருவரான Agneesh Barua.
“சில சுற்றுச் சூழல் நிலைமைகளில் சுண்டெலிகள் அவற்றின் உமிழ் நீரில் அதிகளவு நச்சுப் புரதங்களை உற்பத்திசெய்கின்றன. இந்த மாற்றம் அவற்றின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டால் சில ஆயிரம் ஆண்டுகளில் பாம்புகளைப் போன்ற நச்சு எலிகளை நாங்கள் சந்திக்க நேரிடலாம். ஆனால் இதேபோன்ற மாற்றம் மனிதர்களிடையே உடனடியாக ஏற்பட்டுவிடாது- “என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஒருவேளை பல ஆயிரம் வருடங்களின் பின்னர் அந்த உயிரியல் மாற்றம் நிகழ்ந்தால் ” இப்போது நாங்கள் காண்கின்ற நச்சு மனிதர்கள் அப்போது “நிஜமாகி” நம்மை தீண்டிவிடலாம். இன்றைக்கு நகைச்சுவையாகத் தெரிவது நாளை நிதர்சனமாகி விடலாம்” என்று கூறிச் சிரிக்கின்றனர் அறிவியலாளர்கள்.
– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.