மிதிவண்டிக் காதலராக வாழ்ந்தவரின் விருப்பப்படி மிதிவண்டிப் பாடையில் தனது கடைசி யாத்திரையையும் மேற்கொண்டார்.

குறும்படத் தயாரிப்பாளரும், மிதிவண்டிக்காதலருமான படி காஹில் இரத்தப் புற்றுநோய் காரணமாகத் தனது 44 வயதிலேயே மரணத்தை எதிர்கொண்டார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடலை ஒரு மிதிவண்டிப் பாடையில் வைத்து கிளாஸ்னவின் மயானத்துக்கு உளக்கிச் சென்றார் சகோதரர் கொனர். மரண ஊர்வலத்தில் அந்தப் பாடைக்குப் பின்னால் மேலும் சிலரும் மிதிவண்டிகளில் சென்றார்கள்.  

தன்னைப் போலவே மிதிவண்டிக் காதலரான பிலிப் டி ரூஸுடன் சேர்ந்து புளொக் ஒன்றை உருவாக்கி மிதிவண்டிகள் பற்றி உட்பட பல விடயங்களைப் படமாக வெளியிட்டு வந்தார் அயர்லாந்தைச் சேர்ந்த படி காஹில். “எந்த இடத்துக்கும் வேகமாக, வசதியான முறையில் போவதற்கு மிதிவண்டிதான் எனக்குப் பிடித்தமானது. அது மனதுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உடல் ஆரோக்கியம், சுற்றுப்புற சூழலுக்காகவெல்லாம் நான் மிதிவண்டி உளக்குவதில்லை,” என்பது படி காஹிலின் கருத்து.  

2012 லிருந்து படி காஹில் மாதாமாதம் மிதிவண்டியில் போகிற சாதாரண மனிதர்கள் பற்றியும் ஐரிஷ் கலை, கட்டடக்கலை போன்றவைகளைப் பற்றியும் குறுஞ்சினிமாக்கள் எடுத்து cyclingwith.com என்ற இணையத் தளத்தில் வெளியிட்டு வந்தார். அவர் வீதியில் மிதிவண்டியில் போகிறவர்களைப் படமெடுப்பதற்காக ஒரு பிரத்தியேக மிதிவண்டியையும் வடிவமைத்துப் பாவித்து வந்தார். 

https://vetrinadai.com/news/francycling/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *