பாலியை அடுத்த கடற்பிராந்தியத்தில் காணாமல் போய்விட்ட இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்.
ஐம்பத்து மூன்று மாலுமிகளைக் கொண்ட இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலொன்று பாலி தீவையடுத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அது புதனன்று அதிகாலையில் காணாமல் போய்விட்டதாக இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. அப்பகுதி நீர்ப்பரப்பைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று அக்கப்பல் காணாமல் போயிருப்பது மிகவும் விசனத்துக்குரியது என்றும் இந்தோனேசியா குறிப்பிட்டிருக்கிறது.
சுமார் 43 வருட வயதான அந்த ஜேர்மனிய நீர்மூழ்கிக்கப்பலைத் தேடுவதற்கான பணிகள் நடக்கும் அதே சமயம் ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. அங்கே கடற்பிராந்தியம் சில இடங்களில் சுமார் 700 மீற்றர் ஆழமானது. இந்தோனேசியாவிடமிருக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஐந்துமே பழையவையே. வரவிருக்கும் ஐந்து வருடங்களுக்குள் அவைகளையெல்லாம் பாவனையிலிருந்து நிறுத்திப் புதியவைகளை வாங்குவதற்கு இந்தோனேசியா திட்டமிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்