20 -29 வயதானவர்களிடையே அஸ்ரா செனகா தடுப்பு மருந்தின் மோசமான பக்கவிளைவுகள் அதிகம்.
அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்பவர்கள் வெவ்வேறு மோசமான பக்கவிளைவுகளால் தாக்கப்படுவது அரிதானாலும் உண்மையே. இது சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளியாகியிடுக்கும் புள்ளிவிபரங்களாலும் தெளிவாகியிருக்கிறது. சில நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளை முழுவதும் பாவிப்பிலிருந்து நிறுத்த, வேறு சில நாடுகள் அவைகளை 55 அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றன. சுவீடனில் அவை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
https://vetrinadai.com/news/az-give-away/
பெருமளவில் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் பாவித்த பிரிட்டனின் புள்ளிவிபரங்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. அவர்களுடைய விபரங்களின்படி எத்தனை வயது குறைந்தவர்களாக இருக்கிறார்களோ அத்தனைக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகமான அளவு மோசமான பக்கவிளைவை எதிர்கொண்டவர்கள் 20 – 29 வயதுள்ளவர்களாகும்.
20 -29 வயதுள்ளவர்களிடையே அஸ்ரா செனகாவின் தடுப்பூசிகளால் இரத்தக் கட்டி போன்ற கடுமையான பக்கவிளைவால் பாதிக்கப்பட்டோர் 100,000 பேரில் 1.1 பேராகும். 30 வயதுக்கு உட்பட்டவர்களில் இறந்து போனவர்கள் மார்ச் மாதம் வரை 3 பேர் மட்டுமே.
மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரில் 40 -49 வயதுக்காரர் அவர்களைவிட இளையவர்களை விடப் பாதிப்பேர் மட்டுமே. எனவே, மிகத் தெளிவாக எந்த வயதுக்காரர்களுக்கு மட்டும் அதைப் பாவிப்பது நல்லது என்று தெளிவான வரையறை உண்டாக்க முடியாதிருக்கிறது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
சிறு வயதினருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் போடப்படவில்லை என்பதால் அதுபற்றிய விபரங்கள் ஏதும் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்