பாரிஸ் ஊடாக பெல்ஜியம் சென்ற மாணவர்களுக்கு இந்திய வைரஸ்!
இந்தியாவை உலுக்கி வரும் இரட்டைத் திரிபினால் பீடிக்கப்பட்ட மாணவர் குழு ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாக பெல்ஜியம் நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 12 ஆம் திகதி இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பாரிஸ் சார்ள் து ஹோல் (Roissy) விமான நிலையத்தை வந்தடைந்த சுமார் 43 தாதிய மாணவர்கள் (nursing students) அடங்கிய குழுவில் இருபது பேருக்கே இந்தியத் திரிபு வை ரஸ் தொற்று அறிகுறி காணப்பட்டுள்
ளது.
மாணவர்கள் பஸ் ஒன்றின் மூலம் பாரிஸில் இருந்து பெல்ஜியம் சென்றடைந்த பின்னர் ஐந்து நாட்களில் அவர்களில் பலருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.அவர் களில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருபது பேர் அங்கதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெல்ஜியத்தில் தாதியர் பயிற்சிக்காக வந்த இந்திய மாணவர் குழுவினரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். பெல்ஜியத்தின் Louvain பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்திய
இரட்டைத் திரிபு வைரஸ் தொற்றை உறுதி செய்துள்ளனர்.
இதேவேளை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் 39 பேர் இந்திய இரட்டைத் திரிபுத் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கியூபெக் மாகாணத்திலும் ஒருவருக்கு இந்தியத் தொற்று
கண்டறியப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் தொற்றிய சிலர் ஏற்கனவே இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரதாஸன். பாரிஸ்.