புகையிரதமொன்று மேடைக்கு வரமுன்னர் எப்படித் தயாராகிறது?

உலகின் இயந்திரமயமாக்கல் காலத்தின் அடையாளமாக நீராவியால் இயக்கப்படும் இயந்திரங்களைக் குறிப்பிடலாம். அவ்வியந்திரங்களிலொன்றுதான கரிக்கோச்சி, சிக்கு புக்கு ரயில் என்றெல்லாம் செல்லமாகக் குறிப்பிடப்படும் புகையிரதம். புகையைக் கக்கிக்கொண்டு, க்க்கூஊஊஊ என்று ஊளையிட்டபடி புகையிரதங்கள் ஓடுவதை 1960 களின் நடுப்பகுதிவரை பல நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.

இன்று உலகின் அருங்காட்சியகங்களில், ரயில் நிலையப் பாதுகாப்புக் கொட்டகைகள் சிலவற்றில் காணக்கூடிய புகையிரதங்கள், சில நாடுகளில், அவைகளின் விசிறிகளால் பாதைகளில் ஓடவைக்கப்படுவதைக் காணலாம். அவைகளில் பயணிக்கவும் செய்யலாம். அவ்வியந்திரங்களின் ஆர்வலர்களில் ஒருவன் நான் எனலாம். எனவே சுவீடன் நாட்டில் ஒரு சங்கத்தில் இணைந்து அவைகளைப் பராமரிக்க, அவைகளில் பயணிக்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

பயணிகளை ஏற்றிக்கொள்ளப் புகையிரத நிலையத்துக்கு வரும்வரை எப்படி அவை தயாராகின்றன எபதைப் பற்றிய சிறிய விபரங்களடங்கிய காணொளி இது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *