அமெரிக்க ஆயுதத் தயாரிப்பாளர்கள் மீது மெக்ஸிகோ வழக்கு.

தெரிந்துகொண்டே மெக்ஸிகோவின் போதைப் பொருட்களை விற்கும் குற்றவியல் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதாக மெக்ஸிகோவின் அரசு அமெரிக்காவின் ஆயுத விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மெக்ஸிகோவில் குற்றங்கள் நடந்த இடங்களில் காணப்படும் ஆயுதங்களில் 70 – 90 விகிதமானவை அமெரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்டவையே என்கிறது மெக்ஸிகோ.

கிஞ்சித்தும் கருணையின்றி மெக்ஸிகோவின் போதைப் பொருட்களை விற்கும் குழுக்கள் தமது வழியில் வரும் எவரையும் சித்திரவதை செய்வதிலும் கொல்வதிலும் ஈடுபடுகின்றன. அவர்களுடைய நடத்தையும் ஆயுதப் பலனும் அந்த நாட்டின் அரசை முடங்கவைத்திருக்கிறது. 

கடந்த வருடத்தில் மட்டும் 34,515 பேர் மெக்ஸிகோவில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய வருடத்தை விட 133 கொலைகளே குறைவாக இருந்தாலும் கடந்த வருடத்தில் கொலைகள் குறைந்திருப்பதாகச் சந்தோசப்படுகிறது மெக்ஸிகோ அரசு. 100,000 பேருக்கு 29 பேர் கொலை செய்யப்படுகிறார்கள் மெக்ஸிகோவில்.

மெக்ஸிகோவின் அரசு அமெரிக்காவின் Smith & Wesson Brands, Barrett Firearms Manufacturing, Beretta, Colt’s Manufacturing Company, Glock, Interstate Arms உட்பட பல ஆயுதத் தயாரிப்பாளர்கள் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திட்டமிட்டே தமது நாட்டின் போதைப் பொருள் விற்பனைக் குழுக்களின் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதால் தமது நாட்டில் ஏற்படும் இழப்புக்களுக்காகப் பத்து பில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கோரியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *