செப்டெம்பர் தொடக்கத்தில் கோட்டாபாயா சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமையன்று பதவி விலகி ஓடிப்போன கோட்டாபாயா ராஜபக்சே சிறீலங்காவுக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஒழுங்குகள் உட்பட்ட சில காரணங்களால் அவர் நாட்டுக்குத் திரும்புவது மேலும் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போடப்படலாம் என்கின்றன வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் செய்திகள்.

கோட்டாபாயா ராஜபக்சே உலகின் வேறெந்த நாடுகளுக்கும் சென்று வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிந்ததால் சிறீலங்காவுக்கே மீண்டும் திரும்புவது என்று நிச்சயமாகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அது பற்றி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேயுடன் கலந்தாலோசித்தார். அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக நாடு திரும்புவது பற்றியும், நாட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய வாசஸ்தலங்கள் தயார் செய்வது பற்றியும் திட்டங்கள் தயாராகின்றன.

தாய்லாந்தில் அவர் வாழ்வதற்குரிய செலவுகள் மிகவும் அதிகம். தற்சமயம் அச்செலவுகளை ராஜபக்சேயின் நெருங்கிய வட்டாரத்திலிருப்பவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர் சிறீலங்காவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பிரத்தியேக விமான ஒழுங்கு, 24 மணி நேரப் பாதுகாப்பு ஆகியவைக்கான செலவுகள் ஏற்கனவே பல நூறு மில்லியன் ரூபாய்களைத் தாண்டிவிட்டன. தொடர்ந்தும் அச்செலவுகளைத் தாங்குவதற்குரிய வசதிகள் இல்லாமையும் அவர் நாட்டுக்குத் திரும்பவேண்டியதற்கான ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *