எமிரேட்ஸ் வாழ் முஸ்லீம் அல்லாதவர்களின் திருமணம் பற்றிய புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருக்கின்றன.

2023 பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய எமிரேட்ஸில் வாழும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினரின் திருமண உறவு, மண முறிவு, பிள்ளைகள், சொத்துக்கள் பற்றிய உரிமை சார்பான புதிய சட்டங்கள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 

சட்ட மாற்றங்களின் அடிப்படையைப் பற்றி நாட்டின் சட்ட வல்லுனர் ஒருவர் பேசும்போது “இனிமேல் நீதிமன்றத்தில் பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு சமமாக இருக்கும். அவர்களுக்கு 18 வயது வரை பரம்பரைச் சொத்து, விவாகரத்து மற்றும் குழந்தைகளின் கூட்டுக் காவலில் சமமான உரிமைகள் வழங்கப்படும். விவாகரத்து செய்யும் பட்சத்தில் தங்கள் பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

திருமணம் செய்ய அனுமதி வேண்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது அவர்கள் 21 வயதுடையவராக இருக்கவேண்டும்.விவாகரத்துச் செய்துகொள்ளும் தம்பதிகளின் பிள்ளைகள் பற்றிய உரிமை இருவருக்கும் கொடுக்கப்படும். அது தனக்கு மட்டுமே வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யும் உரிமை இரு சாராருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

விவாகரத்துக் கோரும் உரிமை இரண்டு தரப்புக்கும் சமமானது. மற்றவர் தனக்கு என்ன தவறு செய்தார் என்ற காரணம் காட்டாமலே ஒருவர் தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கோரி நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளலாம். ஜீவனாம்சம் கொடுப்பது பற்றிய முடிவுகளை எடுக்கும்போது நீதிமன்றம் இருவருடைய வருமானம், சொத்துக்கள், கணவர் விவாகரத்துக்கு எவ்வளவு காரணமாக இருந்தார் போன்றவையை ஆராய்ந்தே முடிவெடுக்கும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *