விமல் சொக்கநாதன் குரல் ஓய்ந்தது . பலரும் இரங்கல் தெரிவிப்பு

மூத்த ஊடகவியலாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார்.

தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியில் சென்றவேளை , ட்ராம் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாளராக ஆரம்பித்து, ஐபிசி தமிழ், பிபிசி தமிழ் ஆகிய ஊடகங்களிலும் பணியாற்றி சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவர் விமல் சொக்கநாதன்.

கலைக்குடும்ப பின்னணியில் தனது கலைப்பயணத்தை துவங்கிய அமரர் விமல் சொக்கநாதன் அவர்கள் பல விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஈழத்து திரைப்படமான ‘நான் உங்கள் தோழன்’ என்ற திரைப்படத்தில் தனது நடிப்புத்துறையிலும் கால்பதித்த திரு.விமல் சொக்கநாதன் அவர்கள், வானொலிக் கலை, விமலின் பக்கங்கள் போன்ற நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவராவார்.

அமரர் விமல் சொக்கநாதனின் திடீர் இழப்பைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் பல ஆளுமைகளும் தங்கள் இரங்கல்ச் செய்திகளை சமூக வலைத்தளங்களினூடாக வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *