சமூக ஊடக பிரபல்யம் மரணம்…!

சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் பிரபல்யமடைகின்றனர்.

இவர்களின் ஒரு சில பதிவுகள் அனைத்து மக்களாலும் மிக விரும்பி பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிரவெல்ஸ் குறித்த தகவலை வெளியிட்டு வந்த பெண் தான் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ். இவரை சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, அவரது குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“33 வயதான மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமடோ செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 20 ம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாகும், 2-வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது மது அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *