எந்நாளும் நன்னாளே

தித்திக்கும் திங்களால்
திக்கெட்டும் திறக்கட்டும்
சித்திக்கும் செவ்வாயால்
சிந்தனை செழிக்கட்டும்

அறிவனின் அலர்வால்
தெளிவுகள் பிறக்கட்டும்
விரிகின்ற வியாழனால்
விடிவுகள் மலரட்டும்

வருகின்ற வெள்ளியால்
வெற்றிகள் விளையட்டும்
தருகின்ற காரியால்
மாற்றங்கள் நிகழட்டும்

ஓய்வான ஞாயிறால்
ஞாலமிது உய்யட்டும்
நோயற்ற நாட்களால்
நலமெங்கும் பூக்கட்டும்

வளமூட்டும் கிழமையால்
வாழ்வினி வளரட்டும்
நலமூட்டும் மாதத்தால்
மகிழ்வினி மிளிரட்டும்

ஆக்கம்;
அகிலா பொன்னுசாமி
மலேசிய தமிழ் இலக்கியக் கழகம்