செய்திகள்

ஒடெஸ்ஸா மிருகக்காட்சி நிலையச் சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடாமல் தடுக்கும் நடவடிக்கை.

ரஷ்யாவின் குண்டுத் தாக்குதல்களால் உக்ரேனின் கருங்கடல் துறைமுக நகரான ஒடெஸ்ஸாவின் மிருகக்காட்சிசாலை கைவிடப்பட்டிருக்கிறது. அதனால் அதன் எல்லைகளை உடைத்துக் கொண்டு அங்கே பல நாட்களாக பசியுடன் வாழும் சிங்கங்கள் வெளியே வந்து நகர மக்களை வேட்டையாடும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. அதைத் தடுக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து குழுவொன்று அங்கே விரைந்து சென்று சிங்கங்களைக் காப்பாற்றியது.

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுடன், மிருக வைத்தியர்களும் கொண்ட அந்தக் குழுவை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த Lionel de Lange ஒழுங்குசெய்தார். அவர்களுடன் கனடா, அமெரிக்கா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒன்றுசேர்ந்தனர். மிருகவதையை எதிர்க்கும் அமைப்புக்களான Breaking the Chains,  Warriors of Wildlife ஆகியவையும் சிங்கங்களைக் காப்பாற்றும் திட்டத்தில் இணைந்து செயலாற்றின.

சுமார் 72 மணி நேரம் பயணித்து ஒடெஸ்ஸாவுக்கு வந்த அவர்கள் அங்கிருந்த மிருகக்காட்சிசாலையில் பல நாட்கள் பசியுடன் கிடந்த சிங்கங்கள் ஒன்பதைக் காப்பாற்றினார்கள். அந்தச் சிங்கங்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டுத் தற்காலிகமாக ருமேனியாவின் திர்கு மூரேஸ் நகர மிருகக்காட்சிசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *