டனிஷ் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் இறுக்கப்படுகின்றன.
தனது நாட்டின் குடிமக்களாக மாறுவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் கடினமாக்குகிறது டென்மார்க். 2018 ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் புதிய விதிகளை டென்மார்க்கின் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
ஒரு டனிஷ் குடிமகனாகிறவருக்கு அந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை, கோட்பாடுகளைப் பற்றிய பரீட்சை வைக்கப்படும். அப்பரீட்சையில் குறிப்பிட்ட விடயங்களில் டென்மார்க்கில் ஒருவர் எந்த மாதிரியாக நடக்கவேண்டும் என்பது பற்றிய கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக, “உனது மகள்மகள் உனது சமூகத்திற்கு வெளியே உறவு வைத்திருந்தால் நீ அதை எப்படி நோக்குவாய்?” போன்றவைக்கு ஒருவர் பதிலளிக்க வேண்டும்.
டென்மார்க்கில் குற்றஞ்செய்து சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு டனிஷ் குடியுரிமை கிடைக்காது. அத்துடன் டென்மார்க் குடிமகனாக அனுமதிக்கப்பட வேண்டுமானால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலத்துக்கு முன்னிருந்த நாலு வருடங்களில் மூன்றரை வருடங்கள் வேலை செய்திருக்கவேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்