4.2 பில்லியன் டொலர்களைக் கொரோனாக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புக்களுக்குக் கொடுக்கும் சீமாட்டி.

கடந்த சில வருடங்களாகவே உலகின் மிகப்பெரும் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பலர் தமது பெரும்பான்மையான சொத்தை நல்ல காரியங்களுக்காகக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தார்கள். அவர்களிலொருவர் தான் மக்கென்ஸி ஸ்கொட்.

உலகிம் மிகப்பெரும் பணக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான ஜெப் பெஸோவின் முன்னாள் மனைவி இவர். அமெஸான் நிறுவன ஸ்தாபகரும் மற்றும் பல நிறுவனங்களுக்கு உரிமையானவருமான பெஸோவிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக்கொண்டபோது மக்கென்ஸிக்கு அச்சொத்திலிருந்து ஒரு பங்கு கிடைத்தது. உலகில் விவாகரத்துச் செய்துகொண்டவர்களில் மிகப்பெரும் சொத்தைப் பெற்றவரென்று குறிப்பிடப்படும் மக்கென்ஸியின் சொத்து மதிப்பு சுமார் 58 பில்லியன் டொலர்களாகும். இவர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரும்கூட.

இவர் தான் ஏற்கனவே அறிவித்த முடிவின்படி தன் பெரும்பான்மையான சொத்துக்களை நற்காரியங்களுக்குக் கொடுத்து வருகிறார். தற்போது உலகெங்கும் தமது வாழ்வாதாரம் கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நலிந்தவர்களுக்காகத் தனது சொத்தில் 4.2 பில்லியன் டொலர்களைக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார் மக்கென்ஸி ஸ்கொட். 

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *