சக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டும் ஆர்ஜென்ரீனா பெண்கள்.

பெரும்பாலும் கத்தோலிக்க திருச்சபைகளால் அரசியல் இயக்கப்படும் லத்தீனமெரிக்க நாடுகளில் பெண்களுக்கு அவர்களுடைய உடலின் மீது உரிமை கிடையாது. கற்பழிப்புக்கு உள்ளானவர்களுக்கும் கருக்கலைப்புச் செய்துகொள்ளும் உரிமை கிடைக்காது.

கியூபா, உருகுவேய், கியானா ஆகிய நாடுகளில் மட்டுமே கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. செனட்சபையில் 12 மணித்தியாலங்கள் விடாத வாதப் பிரதிவாதங்களின் பின்னர் 38 -29 என்ற வாக்கு வித்தியாசத்தில் பெண்கள் தமது 14 வது கர்ப்ப வாரம்வரை கருக்கலைப்புச் செய்துகொள்ளலாம் என்ற உரிமையைக் கொடுக்கும் சட்டம் நிறைவேறியது. 

ஆர்ஜென்ரீனாவில் இந்தக் கோரிக்கை கால் நூற்றாண்டுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டுப் பாராளுமன்றத்தில் தோல்வியுற்று வருகிறது. இன்று செனட்சபையில் வாக்கெடுக்கப்பட்டது ஒன்பதாவது தடவையாகும்.

கருக்கலைப்பு உரிமையை எதிர்ப்பவர்களின் வாயை அடைப்பதற்காக மேலும் சில மாற்றங்கள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிள்ளை பெற்றுக்கொள்பவர்களுக்கு அதன் மூன்று வருடங்களுக்குப் வெவ்வேறு விதமான உதவித்தொகைகள் கொடுக்கப்படும்.

வருடாவருடம் ஆர்ஜென்ரீனாவில் 450, 000 கருக்கலைப்புகள் இரகசியமாக நடக்கின்றன என்கிறது கணிப்பீடுகள். அப்படிக் கருக்கலைப்புக்கள் செய்துகொண்ட பெண்களில்  40,000 பேர் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் மருத்துவ சேவைகளை நாடுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆர்ஜென்ரீனாவின் பெண்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி பக்கத்து நாடுகளிலும் இதே உரிமைக்காகப் பல வருடங்கள் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் கிடைக்கச் சந்தர்ப்பம் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.  

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *