உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை.

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன. உயிர்த்த ஞாயிறன்று காலை அந்த விண்கல வாகனத்தினுள்ளிருந்த 1.8 கிலோ அளவிலான ஹெலிகொப்டரை வெளியே எடுத்திருக்கிறார்கள் அங்கே பறக்கவிடுவதற்காக.

https://vetrinadai.com/news/perseverance-nasa/

Ingenuity என்ற அந்த ஹெலிகொப்டரை அங்கே பறக்க விடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன. 

#MarsHelicopter touchdown confirmed! Its 293 million mile (471 million km) journey aboard @NASAPersevere ended with the final drop of 4 inches (10 cm) from the rover’s belly to the surface of Mars today. Next milestone? Survive the night. http://go.nasa.gov/ingenuity

என்று அந்த நிகழ்ச்சியைப் பற்றிய சந்தோசத்தை டுவீட்டியது நாஸா. 

செவ்வாய்க் கிரகத்தின் வெப்பநிலை – 150 செஸ்லியஸ் வரை இறங்கலாம். ஆனால், வரும் நாட்களில் – 90 செல்ஸியஸ் ஆக இருக்கும் என்று தெரிகிறது. ஹெலிகொப்டரின் தொழில்நுட்பப் பாகங்கள் குளிரை எப்படித் தாங்கப்போகின்றன என்பதே முக்கிய சவாலாகும். அவைகளைச் சுமார் + 7 செல்ஸியஸில் வைத்திருக்கும் கலங்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

Perseverance வாகனத்திலிருந்து ஹெலிகொப்டர் Ingenuity வெளியே வரும்வரை அவையிரண்டும் தாயின் வயிற்றிலிருக்கும் சேய் போன்று இயங்கின. இனிமே இன்ஜெனுயிடி தனது சொந்தத்தில் இயங்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்ஜெனுயிடியின் இயக்கங்களைத் தூசி தட்டி, செப்பனிட்டுத் தனது முதலாவது பறத்தலுக்குத் தயாராக்கும் விபரங்களில் வரும் நாட்களில் நாஸாவின் பொறியியலாளர்கள் ஈடுபடுவார்கள். ஏப்ரல் 11 ம் திகதி அது தனது கன்னிப் பறத்தலை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. 

செவ்வாய்க்கிரக வளிமண்டலத்தின் அடர்த்தியானது பூமியின் வளிமண்டல அடர்த்தியின் நுற்றிலொரு பங்கைவிடக் குறைந்தது. அது இன்ஜெனுயிடி பறப்பதற்குச் சவால்விடும். அதே சமயம் செவ்வாயின் ஈர்ப்புச் சக்தி புவியினதை விட 38 விகிதமானது என்பது ஒரு சாதகமான அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.

காற்றாடி விமானங்களைப் போலவே இன்ஜெனுயிடியும் பறக்கும்போது படங்களைப் பிடிக்கும். அதன் ஆரம்ப முயற்ச்சிகள் சிறியதாக இருக்கும். அவை மெதுவாக அதிகரிக்கப்படும் என்று நாஸா விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *