“பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தமது நிலத்தையோ, வீட்டையோ விற்கும் முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களுடைய மயானங்களில் இடம் கிடையாது!”
ஜெருசலேமிலிருக்கும் அல் – அக்ஸா பள்ளிவாசலின் பிரதம போதகரான ஷேக் இக்ரிமா சப்ரி புதிய பத்துவா ஒன்று பாலஸ்தீனர்கள் யூதர்களுக்கு நிலத்தையோ, வீடுகளையோ விற்கக்கூடாது என்கிறது. அப்படி விற்பவர்களுக்கு முஸ்லீம்களுடைய மயானத்தில் புதைக்க இடம் மறுக்கப்படும் என்று அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.
இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியில் சில்வான் என்ற யூதக் குடியிருப்பொன்றில் 15 யூதக் குடும்பங்கள் குடியேறியதைத் தொடர்ந்தே இந்த பத்துவா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அப்படியாக யூதர்களுக்குத் தமது நிலங்களை, வீடுகளை விற்பவர்களின் நல்ல, கெட்ட காரியங்களில் முஸ்லீம்கள் பங்குபற்றலாகாது, அவர்களுடன் வியாபாரம் போன்ற உடன்படிக்கைகளில் ஈடுபடலாகாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையொட்டிக் குறிப்பிட்ட யூதக் குடியிருப்புக்கு நிலங்களை விற்றவர்கள் மூவரை அவர்களின் பெற்றோர்கள் தம்முடன் உறவற்றவர்களென்று பகிரங்கமாக விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்