அமெரிக்காவை நோக்கித் தெற்கிலிருந்து புலம்பெயர்கிறவர்களை வழியில் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனது நாட்டு எல்லைக்குத் தஞ்சம் கோரி வருபவர்களை வழியிலேயே தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க குவாத்தமாலா, மெக்ஸிகோ, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கைகளை ஏற்படுத்தி இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க எல்லையில் கடந்த மாதங்களில் கட்டுக்கடங்காமல் தஞ்சம் கேட்டுவருபவர்களை நிறுத்த அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் காவல் மிகவும் பலமாக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து நாடுகளுடனான ஒப்பந்தப்படி மெக்ஸிகோவின் பக்கத்தில் சுமார் 10,000 க்கும் அதிகமானவர்கள் காவலில் ஈடுபடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி குவாத்தமாலா தன் பங்குக்கு எல்லைப் பாதுகாப்பைச் சுமார் 15,000 ஆயிரத்தால் அதிகரிக்கவும், ஹொண்டூராஸ் 7,000 ஆல் அதிகரிக்கவும் ஒத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தாம் ஏற்கனவே அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டிருப்பதாக அவை குறிப்பிடுகின்றன.
தான் பதவிக்கு வந்தவுடன் தஞ்சம் கோரி வருபவர்களைத் தாராளமாக உள்ளே விடத் தயாரென்று ஜோ பைடன் குறிப்பிட்டதையடுத்து பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்காவின் எல்லைக்குக் கொண்டுவரும் மனிதக் கடத்தல்காரர்கள் பலர் பெருமளவில் இயங்கிச் சம்பாதித்து வருகிறார்கள். எல்லைக்காவல்களை ஒன்றுசேர்ந்து கடுமைப்படுத்துவதன் மூலம் அந்தக் கடத்தல்காரர்களின் இயக்கத்தைக் குறைப்பதே நோக்கமாகும்.
மெக்ஸிகோவில் பாதுகாப்புக்குப் படைகளுக்குள் இருக்கும் லஞ்ச ஊழல்களால் தம்முடன் அவர்கள் இணைந்து பணியாற்றுவதில்லை என்று அமெரிக்காவின் எல்லைக் காவல்ப்படைத் தலைவர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்