போலி பைசர் தடுப்பு மருந்துகள் போலந்திலும், மெக்ஸிகோவிலும் கைப்பற்றப்பட்டன.
ஒரு தடுப்பூசி சுமார் 1,000 டொலர்கள் வரை விலைக்கு பைசரின் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் மெக்ஸிகோ, போளந்து ஆகிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஒரு மருத்துவரிடம் கைப்பற்றப்பட்டவைகளில் எப்பிரயோசனமும் கொடுக்காத, மனிதரைப் பாதிக்காத ஒரு திரவம் பைசர் தடுப்பூசி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. போலந்தில் கைப்பற்றப்பட்டவை முகச்சுருக்கத்துக்கு எதிரான மருந்தாகும்.
“தொலைத்தொடர்பின் மூலம் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய சூழல், தடுப்பு மருந்துகளுக்கான தட்டுப்பாடு, மக்களின் சுயநல நோக்கம், ஆவேசம் ஆகிவையால் இப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்று நாம் ஏற்கனவே ஊகித்திருந்தோம்,” என்று பைசர் நிறுவனத்தின் உயரதிகாரி இதுபற்றிக் கூறுகிறார்.
பெப்ரவரி மாதத்திலேயே இதுபற்றி மெக்ஸிகோ அரசு எச்சரித்திருந்தது. அதையடுத்து உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும் இந்த இரு நாடுகளிலும் உலவிவரும் போலி மருந்துகள் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.
ஹொண்டுராஸை நோக்கி விமானத்தில் போய்க்கொண்டிருந்த ஸ்புக் நிக் தடுப்பு மருந்து என்று குறிப்பிடப்படும் 6,000 தடுப்பு மருந்துகளை ஆராய்ந்துகொண்டிருப்பதாக அந்த நாடு அறிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்