கால அட்டவணையில் சிறிது தாமதமாகிவிட்டாலும் ஹொண்டாவும் “மின்கல வாகனங்கள் மட்டும்” என்ற அலையில் தொற்றிக்கொள்கிறது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஹொண்டா நிறுவனத்தில் இயக்குனர் சக்கரத்தைத் தன் கையிலெடுத்துக்கொண்ட தொஷிஹீரோ மீபெ தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியபோது எந்தத் திசை நோக்கித் ஹொண்டா நிறுவனம் திருப்பப்படும் என்பதைப் பற்றித் தெரிவித்தார். அவரது முக்கிய அறிவிப்பு 2040 இல் ஹொண்டா நிறுவனம் மின்சாரக் கலங்களால் இயங்கும் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்பதாகும்.

https://vetrinadai.com/news/volvo-electric-cars/

தமது நிறுவனம் அதை எப்படிப் படிப்படியாக அதிகரிக்கும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். 2030 இல் ஹொண்டாவின் சகல தயாரிப்புக்களிலும் 40 % மின்கலத்திலான வாகனங்களாக்கப்பட்டு 2035 இல் அவை 80 % விகிதத் தயாரிப்புக்களாக அதிகரிக்கப்படும் என்றார் அவர். 

ஹொண்டா நிறுவனம் தனது முதலாவது மின்சக்தியாலான தனியார் வாகனத்தை Honda e என்ற பெயரில் கடந்த வருடம்தான் வெளியிட்டது. அது ஒரு த்டவை முழு மின்கலத்தைச் சேவித்தால் 280 கி,மீற்றர்கள் போகக்கூடியதாக நகரத் தேவைகளுக்கானது என்று அறிவிக்கப்பட்டது. அது World Urban Car என்ற  பரிசைப் பெற்றிருக்கிறது. 

பல இரண்டு சக்கர உந்துவண்டிகளையும் தயாரிக்கும் ஹொண்டா அடுத்த மூன்று வருடங்களுக்குள் மூன்று வண்டிகளை மின்கலத்தில் வெளியிடுமென்றும் அறிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *