ஒரினத் திருமணத்துக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் அமோக வாக்களிப்பு!

ஒரு பாலினத்தவர்கள் ஏனைய ஜோடிகளைப் போன்று திருமணம் செய்து கொள்வதையும் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அங்கீகரிக்கும் சட்டத்துக்கு சுவிஸ் மக்கள் அமோக ஆதரவைவாக்குகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

இன்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும்வாக்கெடுப்பில் ஒருபாலினத் திருமணங்களை ஆதரிக்கும் தரப்பினர் 64 சதவீதவாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்இதன் மூலம் ஓரினத் திருமணத்தை (same-sex marriage) அங்கீகரித்துள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு சுவிற்ஸர்லாந்தும் இணைந்துகொள்கிறது.

ஆணை ஆணும் பெண்ணைப் பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றசட்டத்தை சுவிஸ் நாடாளுமன்றம் கடந்தடிசெம்பரில் நிறைவேற்றி இருந்தது.ஆனால் சுவிஸின் நேரடி ஜனநாயகஅரசமைப்பின் படி சட்டம் ஒன்றை எதிர்க்கின்ற தரப்பினர் தமக்கு ஆதரவாக 50ஆயிரம் கையொப்பங்களைச் சேகரித்து விண்ணப்பித்தால் அந்தச் சட்டத்தின் மீதுமக்கள் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

அந்த அடிப்படையிலேயே ஒருபாலினத்திருமணச் சட்டம் மீதும் கருத்தறியும்வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.அதில் சட்டத்துக்கு அமோக ஆதரவாகவாக்குகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் ஓரின தம்பதிகள் இனிமேல்ஏனையோரைப் போன்று சம உரிமைகளுடன் திருமணம் புரியலாம்.குழந்தைகளைதத்தெடுத்து வளர்க்கலாம். திருமணம்புரிகின்ற இரண்டு பெண் ஜோடிகள்தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஆணின் விந்தணுவை நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளவும் (sperm donations) உரித்துடையவர்களாவர்.

சுவிஸ் ஆண் ஒருவரை மணம் புரியும் வெளிநாட்டு ஆண் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். பெண் ஜோடிகளுக்கும் இது பொருந்தும்.

ஓரினத் திருமணம் உலகில் சுமார் முப்பது நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், ஸ்பெயின், நோர்வேசுவீடன், போர்த்துக்கல், ஐஸ்லாந்துடென்மார்க், பிரான்ஸ், லக்ஸம்பேர்க்அயர்லாந்து, மோல்ரா, ஜேர்மனி, ஒஸ்ரியா, இங்கிலாந்து, பின்லாந்து ஆகிய15 ஐரோப்பிய நாடுகள் ஓரினத் திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. சுவிஸ்16 ஆவது நாடாக அவற்றோடு இணைந்துகொள்கிறது.ஆசியாவில் தைவான் மாத்திரமே ஓரின திருமணத்தைச் சட்டத்தின் மூலம் அங்கீகரித்துள்ள ஒரே நாடு ஆகும்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *