டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களை கசியவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் முன்னாள் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைது செய்யப்பட்டிருப்பது சில நாட்களுக்கு முன்னர் தான் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதே குற்றம் தற்போது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிளாஸ் யூர்ட் பிரடெரிக்சனின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

கிளாஸ் யூர்ட் பிரடெரிக்சனின் கட்சியான வென்ஸ்ர மேற்கண்ட விபரத்தை பத்திரிகையாளர்களுக்கு இன்று வெளியிட்டிருக்கிறது. டென்மார்க்கும் அமெரிக்காவும் சேர்ந்து முக்கிய தலைவர்களின் தொலைபேசித் தொடர்புகளை வேவு பார்த்ததாக பிரடெரிக்சன் பல தடவைகள் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் டென்மார்க்கின் உளவு இரகசியங்களைப் பாதுகாக்கத் தவறியிருப்பதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தொடர்ந்தும் லார்ஸ் பிண்ட்சன், அமைச்சர் பிரடெரிக்சன் மீதான குற்றங்கள் விபரமாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆயினும், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நேர நாட்டுத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பலரின் தனிப்பட்ட தொலைபேசித் தொடர்புகளை டென்மார்க் ஊடாகச் செல்லும் தொலைத்தொடர்பு வழிகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் வேவு பார்த்ததாக அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

சாள்ஸ் ஜெ. போமன்