விந்தன் நினைவுக்கிண்ணம்  – உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

விளையாட்டு வீரர் விந்தன் நினைவில் மிகப்பெரியளவில் ஏற்பாடுசெய்யப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஜூன்மாதம் லண்டனில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய இராச்சிய திருமலை சண்ரைஸ் கழக ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் 9வயதுக்கு கீழ்பட்டோருக்கான போட்டி முதல் திறந்த போட்டிவரை பல வயதினருக்குமான போட்டியாக இடம்பெறவுள்ளது.

பகலிரவுப்போட்டிகளாக இடம்பெறும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணியினருக்கு பணப்பரிசும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 18ம் திகதி மேமாதம் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை அணிகளே பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக விடயங்களை வெற்றிநடை நாட்காட்டியை அழுத்திப்பார்க்கலாம்

வெற்றிநடை நாட்காட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *