நிலவும் பெண்களும்- எழுதுவது கவிஞர் கேலோமி

நிலா
மனதின்
மாறுபாடு.
மனதின்
வேகம்.
வளர்பிறை
தேய்பிறை
அமாவாசை
பௌர்ணமி
என்ற
வளர்சிதை
மாற்றங்கள்
உடையது.
தூரத்தில்
இருந்து
பார்க்க
அதீத
வசீகரம்.
நெருங்கி
பார்த்தால்
அதன்
சிற்சில
குறைகள்.
சூரியனை
ஆண்களாக
தந்தையாய்
பார்த்த
மரபு.
பெண்களுக்கு
சந்திரனை
அதன்
அழகை
பொலிவை
பெண்களுக்கு
தாய்மையை
போற்றுவித்தது.
சூரியன்
நெருங்கமுடியா
வஸ்து.
தகப்பனை
நாடாமல்
தாயின்
மூலம்
அனுசரித்து
பெற்று
வாழும்
மனதின்
கூக்குரல்.
பெண்கள்
தேவதை
கருணை
இரக்க
நேச
காதல்
பாவத்தின்
அழிக்க
இயலா
சந்திர
கல்வெட்டுகள்.
போய்
கண்டறிந்தார்
இதிகாசங்களில்
புராணங்களில்
மெத்த
உண்டு.
அதனை
கற்பனை
என்று
தூற்றுவார்
உண்டு.
சந்திரன்
இருபத்தி ஏழு
நட்சத்திரங்களில்
ரேவதியை
நேசித்தான்
என்ற
சாட்சியங்கள்
சாஸ்திரங்களில்
மெத்த
உண்டு.
கதை
கற்பனை
மூடநம்பிக்கைகள்
மத்தியில்
அதன்
வீரியத்தின்
விலாசமே!
இந்த
பயணம்.
ஒர்
வேளை
மனித
அறிவியலால்
அது
இன்றைக்கு
பாரதத்தின்
விலாசம்.
நியூட்டன்
பிறக்காத
வரை
புவியீர்ப்பு விசை
பூமியில்
இல்லையா
என்ன?
கண்டறியும்
வரை
கண்டறிந்த
பொருள்
நம்முடன்
தான்
உலவுகிறது.
மின்சாரம்
எரிபொருள்
எல்லாம்
இயற்கையின்
பரிணாமமே!
உலோகங்கள்
அனைத்தும்
உணவுகள்
அனைத்தும்
பூதங்கள்
ஐந்தும்
இயற்கை
கொடையே!
பல
பருவங்களின்
மாற்றத்தை
உயிராற்றலை
உயர்
கரு
பரிணாமத்தை
உயிர்
வளர்
சிதை
மாற்றத்தை
பெண்
என்பவள்
மாத்திரமே!
உணர்வுகளால்
உரிமைகளால்
பெற
இயலும்.
அவளுக்கு
ஒப்பான
ஆற்றல்
கடவுளிடம்
கூட
இல்லை.
அவள்
நந்தவனம்
காட்டாறு
அகடு
முகடு
சுழல்
காற்று
சுனாமி
மேடு
பள்ளம்
நிறைந்த
வாழ்க்கையில்
வாகை
சூடும்
படைப்பின்
புதல்வி.
எங்கள்
சந்திரவம்சம்
மகாபாரதத்தின்
உயர் கொடை.
அங்கு
குந்தி
மாதுரி
கங்கை
திரௌபதி
சந்தனுமகாராஜனின்
மனைவி
மீனவப் பெண்
சிகண்டி
லக்ஷ்மணா
ராதை
பானுமதி
கிருஷ்ணனின்
தாயார்கள்
மனைவிகள்
என்று
யாதொரு
பேதம்
பார்த்ததில்லை!
திறமை
இருந்தால்
அவன்
அவள்
அடிமை சாசனத்தின்
சிம்மாசனத்தை
தூள்
தூளாக்கி
கர்ணனை
போல்
கடவுளையே!
எதிர்த்து
மடிவான்.
நண்பனின்
ஓர்
நல்ல
குணத்துக்காக
கடவுளின்
திருக்கரங்களில்
தன்
இரத்தத்தை
கொடையாக
அளிப்பான்.
எங்கள்
இதிகாசங்கள்
பெண்களுக்காக
உருவானது
என்றால்
என்றும்
சந்திரன்
எங்கள்
பெண்களின்
ஆசிர்வாதம்!
அனுக்கிரகமே!
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *