அரசனுக்குச் சவால் விடும் தொனியில் பேசுகிறார் ஜேர்டான் அரசகுமாரன் ஹம்சா.

நீண்டகாலமாகவே தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஜோர்டானிய அரசன் அப்துல்லாவையும் அவரது அரசாட்சியையும் விமர்சித்து வந்த ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அய்மான் சவாதியால், ஹம்ஸா பின் ஹூசேன் தனது எதிர்ப்புக்களைக் கைவிடாவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டார். 

https://vetrinadai.com/news/coup-detat-jordan/

உப பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான அய்மான் சவாதி “இளவரசர் நீண்ட காலமாகவே அரசாங்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கவனிக்கப்பட்டது. அவர் நாட்டின் சில உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்ததை எங்கள் வேவு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தன. அத்துடன் அவரது மனைவி வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு கொண்டு தனது கணவனின் திட்டங்கள் பிழையாகினால் நாட்டைவிட்டு ஓடவும் திட்டங்கள் தீட்டியிருந்தார்,” என்று பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். 

இளவரசன் ஹம்சாவின் திட்டங்களைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றைத் தக்க சமயத்தில் முறியடிக்கவே அரசன் அப்துல்லா சுமார் 19 பேரைக் கைது செய்யவும் இளவரசனின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் விளக்கியிருந்தார். 

“நிகழ்வுகள் மோசமாவதற்கான நான் எந்தவிதமாகவும் செயற்படப்போவதில்லை. ஆனால், வெளியிலிருப்பவர்களுடன் தொடர்புகள் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கும் நான் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை,” என்று ஹம்சா தனது டுவிட்டர் படமொன்றில் பேசியிருக்கிறார். 

ஹம்சாவின் தாயாரான பிரிட்டிஷ் பின்னணி கொண்ட அவரது தாயார் நூர் “எனது மகன் மீது அபாண்டமாகப் பொய்க்குற்றங்கள் போடப்பட்டிருக்கின்றன,” என்கிறார். பிரிட்டனில் கல்விகற்ற ஹம்சா பல இராணுவப் பதவிகளில் இருந்தவர், பதக்கங்கள் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாகவே மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஜோர்டானிய அரச குடும்பம் சிக்கல்களில்லாத ஸ்திரமான அரசாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. எனவே, ஏற்பட்டிருக்கும் குடும்பப் பிளவு பக்கத்து நாடுகளையும், ஆதரவு நாடுகளையும் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *