கரியமிலவாயுவை மரங்களைப் போன்று பிராணவாயுவாக மாற்ற முடிகிறது செவ்வாய்க் கிரகத்தில்.
நாஸாவால் செய்வாய்க்கிரகத்தில் இறக்கப்பட்டிருக்கும் ரோவர் விண்கலம் அங்கேயுள்ள வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவைப் பிராணவாயுவாக மாற்றிச் சரித்திரம் படைத்திருக்கிறது. அதாவது இன்னொரு கிரகத்தில் இப்படியான மாற்றத்தைச் செய்யமுடிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
“இது மிகவும் பரீட்சார்த்தமான முதலாவது படியான நடவடிக்கையாகும்,” என்று அதை விபரிக்கிறார் ஜிம் ரூர்ரர் என்ற விண்வெளி ஆய்வாளர். பூமியின் வளிமண்டலத்தைப் போலன்றி செவ்வாயின் வளிமண்டலத்தில் 0.1 பிராணவாயுவே இருக்கிறது. ஆனால், 96 % விகிதம் கரியமிலவாயு இருக்கிறது. அதிலிருந்து மணிக்குப் 10 கிராம் பிராணவாயுவை உண்டாக்க முடிகிறது என்கிறது நாஸா.
“பிராணவாயு என்பது சுவாசிக்க மட்டுமல்ல விண்வெளிக்குப் போகும் கலங்களிலும் அதுவே பாவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் செலுத்தப்படப்போகும் விண்கலங்களில் இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. விண்கலங்களுக்குள் அந்தக் கோட்பாட்டின் மூலம் பிராணவாயுவை உருவாக்குவதன் மூலம் அதில் பயணம் செய்பவர்களும் அதைப் பயன்படுத்தலாம்,” என்கிறார் ஜிம் ரூர்ரர்.
ஒரு விண்கலத்தில் நான்கு விண்வெளி ஆராய்வாளர்கள் பயணம் செய்யமுடியும். அவர்களுக்கு தொன் எரிவாயுவும் 25 தொன் பிராணவாயுவும் தேவைப்படும். அவர்கள் செவ்வாயில் ஒரு வருடம் வாழ்வதற்கு ஒரு தொன் பிராணவாயு தேவைப்படும். எனவே எதிர்கால செய்வாய்க் கிரகத் திட்டத்துக்கு இம்முறையில் பிராணவாயுவைத் தயாரிக்கலாமென்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்