அவசரமாக ஒக்சிஜன் தயாரிப்பதற்கு ‘ஸ்டெர்லைட்’ ஆலை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு அலை.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்திருக்கின்ற ஸ்டெர்லைட் செப்பு ஆலையை(Sterlite copper plant) தற்காலிகமாகத் திற ந்து ஒக்சிஜன் தயாரிப்பதற்குத் தீர்மானி க்குப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

ஒக்சிஜன் உற்பத்தி வேலைகளை அங்கு கண்காணிப்பதற்கு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடடைந்ததிரிபுகளின் தீவிர பரவல் காரணமாகஇந்தியா முழுவதும் மருத்துவ ஒக்சிஜனுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் இன்றி நோயாளிகள் உயிரிழக்கின்ற அவலம் நீடிக்கிறது. நீதிமன்ற உத்தரவின் கீழ் நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கின்ற செப்பு ஆலையைத் திறந்து ஒக்சிஜன் உற்பத்தியை தொடக்குமாறு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒன்று உத்தரவிட்டிருந்தது.

அதனையடுத்து தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலையைத் தற்காலிகமாக நான்கு மாதங்களுக்குத் திறப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆலையின் ஒக்சிஜன் தயாரிப்புப் பிரிவை மட்டுமே இயக்குவது என்றும் ஆலை தொடர்பாக அடுத்த தீர்மானத்தை நான்கு மாத காலத்தின் பின்னர் முடிவு செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு அழைக்கப்படாத ‘நாம் தமிழர்’ போன்ற சில கட்சிகள் ஆலையைத் திறக்கவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. இதனால் தூத்துக்குடியில் ஆலை அமைந்துள்ள பகுதியில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணுக்கும் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும்பெருந் தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகளை வெளியேற்றுகின்ற “ஸ்டெர்லைட்” செப்பு ஆலை பொதுமக்கள் மற்றும் சூழல் பேணும் அமைப்புகளது தீவிர எதிர்ப்புகளை அடுத்து 2018 முதல் சீல் வைத்து மூடப்பட்டிருப்பது தெரிந்ததே.

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான”ஆலையை யார் இயக்குவது என்பது முக்கியம் அல்ல. அது ஏ, பி, சி என யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாட்டுக்கு இப்போது ஒக்சிஜன் மிக அவசர தேவையாக உள்ளது” என்று இந்திய உச்ச நீதிமன்றம்தெரிவித்திருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *