பீகாரில் ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், அதிகாரிகளிடையே பலர் கொவிட் 19 ஆல் மரணம்.
சுமார் 202 பீகார் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 90 % தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது பீகாரில் அதிகாரிகளிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது. அங்கு ஏப்ரல் மாதத்தில் பொலீசார் மட்டுமன்றி, ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பத்திரிகைத் துறையினர் மற்றும் மருத்துவர்களிடையே தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
75 ஆசிரியர்கள், 13 பொலீசார், 14 மருத்துவர்கள், மூன்று ஊடகத்துறையினர், டசினுக்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். 600 மருத்துவ சேவையினருக்கும், பல உத்தியோகத்தர்களுக்கும் சமீபத்தில் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் தடுப்பூசிகளை ஏற்கனவே பெற்றுகொண்டவர்களாகும். இறந்தவர்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரும் அடக்கம்.
பல ஆசிரியர்களும் இறந்திருப்பதையடுத்து ஆசிரியர்கள் சங்கம் பாடசாலைகளை மூடிவிடும்படி வேண்டி நாட்டின் மனித உரிமைக் குழுக்களுக்குக் கடிதமெழுதியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்